தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை வரைஸ்: உலக நாடுகள் பீதி!

 
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை வரைஸ்: உலக நாடுகள் பீதி!

கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்புகளே பல நாடுகளில் இதுவரை குறையாத நிலையில், தென் ஆப்பிரிக்காவில் 50 பிறழ்வுகளுடன் உருமாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸ் தடுப்பூசிகளை தாண்டி செயல்படக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதால் உலக நாடுகள் மீண்டும் பீதியடைந்துள்ளன.

உலகையே மொத்தமாக முடக்கிய கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. உலக அளவில் பல நாடுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை கண்டுபிடித்து விநியோகித்தும் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு உலக மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி வரும் சூழலில் புதிய வகை கொரோனா வைரஸ் மக்களிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோனா வைரஸின் அறிவியல் பெயர் பி.1.1.529. இதற்கு ‘நு’ என பெயரிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை வரைஸ்: உலக நாடுகள் பீதி!

இதுவரை உருமாற்றம் அடைந்த வைரஸ்களை விட இந்த புதிய வகை வைரஸ் 50 முறை பிறழ்வுகளை கொண்டுள்ளதாலும், அதன் முள் போன்ற அமைப்பு (ஸ்பைக்) மட்டும் 30 முறை பிறழ்வுகளை கொண்டிருப்பதும் தான் இந்த வைரஸை கண்டு பலரும் அச்சமடைய காரணமாக உள்ளது. இந்த முள் போன்ற அமைப்பு தான் மனிதர்களின் உடலில் ஊடுருவ காரணம் என்பதால் உருமாறிய இந்த வைரஸ் முன்னதாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகையை விட வேகமாக பரவலாம் என மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இந்த புதிய வகை வைரஸ் தற்போதுள்ள தடுப்பூசிகளின் செயல்திறனையும் தாண்டி மனிதர்களை பாதிக்க கூடிய ஆற்றல் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை வரைஸ்: உலக நாடுகள் பீதி!

இந்தியாவின் தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின், ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரஸூக்கு எதிராக 50% மட்டுமே செயல்திறன் கொண்டதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த புதிய வகை வைரஸூக்கு எதிராக கோவாக்சினின் செயல்திறன் எப்படியிருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போதைய நிலையில் புதிய வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளின் விமான போக்குவரத்தை இங்கிலாந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

From around the web