இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழப்பு!!

 
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழப்பு!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 7 பேரை காணவில்லை.

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழப்பு!!

இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு என்ற எரிமலை உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,676 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியதில் எரிமலை அருகே இருந்த வீடுகள் சேதமடைந்தன. எரிமலையில் இருந்து வெளியேறிய லாவா அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தது, கரும்புகையும், சாம்பலும் 40,000 அடி வரை படர்ந்துள்ளது.

இதனையடுத்து எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதுவரை எரிமலை வெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 7 பேர் காணமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 100 பேர் படுகாயமடைந்ததில் 41 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடலை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழப்பு!!

முன்னதாக, இந்தோனேசியாவில் அதிகாலை 5:17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து எரிமலை வெடிப்புக்கு 13 பேர் பலியாகியுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web