உலக திருநங்கை அழகிப்போட்டியில் கேரள மாடல் ஸ்ருதி சித்தாரா பட்டம் வென்றார்!!

 
உலக திருநங்கை அழகிப்போட்டியில் கேரள மாடல் ஸ்ருதி சித்தாரா பட்டம் வென்றார்!!

இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா உலக அளவில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் முதலிடத்தை பிடித்து பட்டம் வென்றுள்ளார்.

உலக திருநங்கை அழகிப்போட்டியில் கேரள மாடல் ஸ்ருதி சித்தாரா பட்டம் வென்றார்!!

இந்திய சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களில் மிகவும் பாதிக்கப்படுவது திருநங்கைகள் தான். கல்வி, அரசுப் பணி, சமூகத்தில் தங்கள் மீதான மதிப்பு போன்றவற்றிற்காக போராடி தங்களுக்கான உரிமையில் தற்போது தான் திருநங்கைகள் முதல் அடியை எடுத்து வைத்துள்ளனர். இந்தியாவில் திருநங்கைகள் குறித்தான சமூக பார்வை சமீப காலங்களில் தான் மாறத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா உலக திருநங்கைகளுக்கான அழகி பட்டத்தை வென்றிருப்பது இந்தியாவின் பல திருநங்கைகளுக்கும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

உலக அளவில் 2021 ஆம் ஆண்டிற்கான உலக திருநங்கை அழகிப்போட்டி சமீபத்தில் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கின் காரணமாக நேரடியாக இல்லாமல் ஆன்லைன் மூலம் இதற்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் இந்தியாவை சார்ந்த திருநங்கை ஸ்ருதி சித்தாரா மிஸ் டிரான்ஸ் குளோபல் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியர் ஒருவர் திருநங்கை அழகிப்போட்டியில் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். மேலும், சித்தாரா ‘மோஸ்ட் எலகுவண்ட் குயின்’ என்ற பட்டத்தையும் இதே போட்டியில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதி சித்தாரா மிஸ் திருநங்கை போட்டியில் முதலிடம் பெற்றுள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவை சேர்ந்த அழகிகள் வென்றுள்ளனர். திருநங்கை பட்டம் வென்றதற்கான விருது ஸ்ருதிக்கு தற்போது ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் சித்தாராவிற்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

உலக திருநங்கை அழகிப்போட்டியில் கேரள மாடல் ஸ்ருதி சித்தாரா பட்டம் வென்றார்!!

திருநங்கை அழகிப்போட்டியில் முதலிடம் வென்றது குறித்து பேசியுள்ள அவர், ‘இந்த பட்டத்தை காலம் சென்ற என் தாயாருக்கும், சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட எனது தோழி, இந்தியாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கியுமான அனன்யா குமாரி அலெக்ஸிற்கும் சமர்ப்பிக்கிறேன். எனக்காக, நான் சார்ந்துள்ள எனது சமூகத்திற்காக, என் நாட்டிற்காக, உலக திருநங்கை அமைப்புக்காக, ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட என அனைவருக்குமான விருதாக இந்த பட்டத்தை பார்க்கிறேன். முதல் ஐந்து இடங்களில் வருவேன் என்று தான் நினைத்தேன். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. ஸ்ருதி சித்தாரா எனும் நான் இப்போது ‘2021-ஆம் ஆண்டில் மிஸ் டிரான்ஸ் குளோபல் டைட்டில் வின்னர்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

25 வயதான ஸ்ருதி சித்தாரா கேரள அரசின் திருநங்கை முன்னேற்ற பிரிவில் பணியாற்றியுள்ளார். மேலும் கேரளாவில் பிரபல மாடலாகவும் நடிகையாகவும் புகழ் பெற்றுள்ளார்.

From around the web