குட் நியூஸ்!! புது வகை வைரஸுக்கு பூஸ்டர் டோஸில் தீர்வு!! மாடர்னா நிறுவனம் நம்பிக்கை!!

 
குட் நியூஸ்!! புது வகை வைரஸுக்கு பூஸ்டர் டோஸில் தீர்வு!! மாடர்னா நிறுவனம் நம்பிக்கை!!

புது வகை ஓமிக்ரான் வைரஸுக்கு தங்களது பூஸ்டர் டோஸில் தீர்வு காணப்படும் என்று மாடர்னா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலகை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள புதிய வகை வைரஸான ஓமிக்ரானை தடுப்பூசியின் பூஸ்டர் டோஸின் மூலம் சரி செய்யலாம் என அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குட் நியூஸ்!! புது வகை வைரஸுக்கு பூஸ்டர் டோஸில் தீர்வு!! மாடர்னா நிறுவனம் நம்பிக்கை!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸுக்கு ஓமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார நிறுவனம் சூட்டியுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களை போல் அல்லாமல், ஓமிக்ரான் தனது ஸ்பைக் வடிவத்தில் மட்டுமே 32 வகையான உருமாற்றம் அடையக் கூடியது என்பதால் மருத்துவ ஆய்வாளர்கள் பலரும் இந்த வைரஸ் குறித்து கடுமையாக எச்சரித்து வந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகளும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. ஓமிக்ரான் வைரஸ் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுகிறதா? என்பது குறித்து இதுவரை தெளிவாக தெரியவில்லை. அதுகுறித்து ஆய்வு செய்யவும் சில வாரங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.

குட் நியூஸ்!! புது வகை வைரஸுக்கு பூஸ்டர் டோஸில் தீர்வு!! மாடர்னா நிறுவனம் நம்பிக்கை!!

இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகளை தயாரித்து வரும் மாடர்னா நிறுவனம் ஓமிக்ரான் வைரஸுக்கு எதிரான பூஸ்டர் ஷாட்டை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் சி இ ஓ ஸ்டீபன் பென்சல் கூறுகையில், ‘ஏற்கனவே கொடுத்து வரும் மாடர்னா தடுப்பூசிகளின் அளவை அதிகரித்து வழங்குவது ஓமிக்ரானுக்கு எதிராக செயல்படும் வழிகளில் ஒன்றாக இருக்கும். மேலும் மிக விரைவில் ஓமிக்ரான் வேரியண்ட்க்கு எதிரான வியூகத்தில் எங்கள் நிறுவனம் செயல்பட ஆரம்பிக்கும்’ என கூறியுள்ளார்.

From around the web