ஆன்லைன் மோசடி! ஆப் மூலம் ரூ.150 கோடி சுருட்டல்!

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அதனை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில், தற்போது ஆன்லைன் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில், உடனடி வருவாய், இரு மடங்கு ஆதாயம் என சீனாவில் இருந்து பெரும் மோசடி இந்தியாவில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. Power Bank, EZPlan, EZCoin, Sun Factory, Lightening Power Bank உட்பட பல செயலிகளை நம்பி, 300 ரூபாயில் இருந்து பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.
 
அதிலும் Power Bank ஆப், கூகுள் பிளே ஸ்டோரில், டிரென்டிங்கில் 4ஆம் இடத்திற்கும் வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் Power Bank, EZPlan குறித்து பரப்பப்பட்டதால் டெல்லி சைபர் கிரைம் போலீசார் அது குறித்து ஆய்வு நடத்தியதில் அது சீனாவை சேர்ந்த சர்வரில் இருந்து செயல்படுவது நிரூபிக்கப் பட்டுள்ளது.

ஆன்லைன் மோசடி! ஆப் மூலம் ரூ.150 கோடி சுருட்டல்!

இந்த மோசடி மூலம் திரட்டப்பட்ட பணத்தை, சீனாவை சேர்ந்த மோசடி கும்பலுக்கு அனுப்ப, இங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக் கணக்குகளும் செயல்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் இதற்கு உடந்தையாக இருந்த 2 சார்ட்டடு அக்கவுன்டன்டுகள், ஒரு திபெத்திய பெண் உட்பட 10 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்ததுடன் அவர்களின் வங்கிக் கணக்குகளில் 11 கோடி ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது.

From around the web