அதிர்ச்சி!! குழந்தைகளுக்கு அதிகம் பரவும் ஒமைக்ரான்!! பீதியில் உலக நாடுகள்!!

 
அதிர்ச்சி!! குழந்தைகளுக்கு அதிகம் பரவும் ஒமைக்ரான்!! பீதியில் உலக நாடுகள்!!

கடந்த 2 ஆண்டுகளாக சீனாவின் வூகாண் மாகாணத்தில் தொடங்கிய கொரோனாவிலிருந்தே இன்னும் உலக நாடுகள் முழுவதுமாக மீளவில்லை. இந்நிலையில் தற்போது உருமாறிய வடிவில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அதிர்ச்சி!! குழந்தைகளுக்கு அதிகம் பரவும் ஒமைக்ரான்!! பீதியில் உலக நாடுகள்!!

இதுகுறித்து தென்னாப்பிரிக்கா சுகாதாரத் துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென் ஆப்பிரிக்காவில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக பாதிப்புக்களை ஒமைக்ரான் உருவாக்கவில்லை. இதனை மக்கள் கடைப்பிடிக்கும் பட்சத்தில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தேவையில்லை.

அதிர்ச்சி!! குழந்தைகளுக்கு அதிகம் பரவும் ஒமைக்ரான்!! பீதியில் உலக நாடுகள்!!

வர இருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்காமலேயே நான்காவது அலையை நிர்வகிக்க முடியும். முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு ஒமைக்ரான் கொரானா திரிபு அதிக அளவில் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இதுவரை கொரோனாவில் முதல் மூன்று அலைகள் உருவாகியுள்ளன. அச்சமயத்தில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை . ஆனால் தற்போது அதிக அளவிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை கவலை தெரிவித்துள்ளது.

From around the web