அதிர்ச்சி.. ஈபிள் கோபுரத்தில் அரை நிர்வாணமாக ஏறிய இளைஞர்!
ஒலிம்பிக் நிறைவு நாளில், ஈபிள் கோபுரத்தின் மீது அரைநிர்வாண கோலத்தில் மேலாடையின்றி இளைஞர் ஒருவர் ஏறத் தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். 2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசீல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை தட்டிப்பறித்து சென்றனர். இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் முடிவில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது.
Man caught climbing Eiffel Tower shirtless and without safety equipment before the closing ceremony of the #Olympics Games #Paris2024
— Ahmed/The Ears/IG: BigBizTheGod 🇸🇴 (@big_business_) August 11, 2024
Police ordered the evacuation of the area and he has been arrested pic.twitter.com/Mw3iTRaVJL
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு நாளில் ஒருவர் ஈபிள் கோபுரத்தில் ஏறினார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அப்போது மேலாடையின்றி ஈபிள் கோபுரத்தில் ஏறத் தொடங்கினார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
