கொடூரம்... மனைவியை அடுத்தடுத்து 41 முறை ஸ்க்ரூடிரைவரால் குத்திக் கொன்ற கணவன்!

 
ஸ்குரூ

நிமிஷ நேர கோபம் தான் வாழ்நாள் முழுவதும் இடியாய் இறங்கி கழுத்துக்கும் தொண்டையும் இடையில் உருவமில்லாமல் உறுத்திக் கொண்டிருக்கிறது. சிலரது வாழ்க்கையையே தீர்த்தும் விடுகிறது. அப்படியானதொரு சம்பவம் துருக்கியில் நிகழ்ந்துள்ளது. சந்தோஷமாக இங்கிலாந்தில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்ற தம்பதியர், தங்கள் வாழ்க்கையையே இழந்துள்ளனர். 

நிமிஷ நேர கோபம் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் நாசமாக்கி, சுனாமியாய் சுழற்றிப் போட்டுள்ளது. நேற்று முன்தினம் நவம்பர் 14 துருக்கியின் இஸ்தான்புல் சென்றடைந்த அவர்கள், ஒட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அங்கு இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை அடுத்தடுத்து தொடர்ந்து குத்தி கொடூரமாக கொன்றுள்ளார். ஓட்டல் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டதால் ஹோட்டலின் ஊழியர் அலறியடித்தப்படியே அவசர அவசரமாக அறைக்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பெண் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் போலீசுக்கு தகவல் அளித்தார்.

Shocking: UK man stabs wife 41 times with screwdriver in Turkey hotel room  | Crime News - News9live

அந்த இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து, அந்த பெண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது தொண்டை மற்றும் உடல் முழுவதும் சிதைவுகள் காணப்பட்டதை வைத்து, அவர் ஸ்க்ரூடிரைவர் மூலம் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். இந்த கொலை தொடர்பாக துருக்கி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ரத்தக் கறைபடிந்த டி-சர்ட் அணிந்தபடி ஓட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Husband 'k!lls his 26-year-old wife by stabbing her 41 times in the neck  with a screwdriver

விசாரணையில் அவர் தன் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும், மனைவி தனக்கு போதைப்பொருள் கொடுத்தபின் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தனக்கு உளவியல் பிரச்சனைகள் இருப்பதால் மருந்துகள் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், போலீசார் அந்த ஓட்டல் அறையில் சோதனை செய்தபோது எந்த ஒரு போதைப்பொருளுக்கான தடயமும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web