அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் உயிரிழப்பு... ஆக்ஸிஜன் பைப் லைனைத் திருடிச் சென்றதால் மூச்சுத்திணறி பலியான சோகம்!
அரசு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் செல்லும் பைப் லைனை திருடர்கள் திருடிச் சென்றதால், 12 குழந்தைகள் மூச்சுத்திணறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது NICU மருத்துவமனையில் குழந்தை பராமரிப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த சில குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் குழாய் பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 17ம் தேதி நள்ளிரவு குழந்தைகள் திடீரென அழத் தொடங்கி விட்டன. உடனே செவிலியர்களும், மருத்துவர்களும் குழந்தைகளை பரிசோதித்தனர். குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது தெரிய வந்தது.
செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக மருத்துவ நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜம்போ ஆக்ஸிஜன் சிலிண்டரில் இருந்து உடனடியாக ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகே குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் செல்வதற்காகப் பொருத்தப்பட்ட குழாய்கள் திருடப்பட்டிருப்பதும் அதனால் ஆக்ஸிஜன் செல்வது தடைப்பட்டதும் தெரியவந்தது.
இந்த மோசமான சம்பவத்தில் 12 குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இது குறித்த ராஜ்கர் மாவட்ட மருத்துவமனை, ``புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லும் தாமிரத்தாலான ஆக்ஸிஜன் பைப் லைனை திருடர்கள் வெட்டி திருடி சென்று இருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு புதிய கட்டடத்தில் இது போன்று நடந்திருக்கிறது. இது குறித்த விசாரணை நடந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!