“ஸ்டார் ஹோட்டல்களில் தான் தங்குவோம்” போலீசாரிடம் சிக்கிய 22 பேர் கொண்ட காஸ்ட்லி பிச்சைக்கார கும்பல்!

 

வெயிலோ, மழையோ பகல் முழுக்க தெருக்களில் பிச்சை எடுத்துவிட்டு இராத்திரிகளில் ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமே தங்கும் 22 பேர் கொண்ட பிச்சைக்காரர்கள் கும்பலை இந்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் இருந்து இந்தூருக்கு வந்திருந்தனர். தற்போது அந்த கும்பலை சேர்ந்த 22 பேரை போலீசார் ராஜஸ்தானுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த தகவலை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், ராஜஸ்தானில் இருந்து 22 பேர் கொண்ட குழு பிச்சை எடுப்பதற்காக இந்தூருக்கு வந்து ஹோட்டலில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குழுவில் 11 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள் இருந்தனர். அவர்கள் நாள் முழுவதும் நகரின் பல்வேறு இடங்களில் பிச்சை எடுத்து விட்டு இரவில் தூங்குவதற்காக ஓட்டலுக்கு வருகின்றனர்.

இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் ராஜஸ்தானில் உள்ள அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். மேலும், நகரில் உள்ள அனைத்து ஹோட்டல், லாட்ஜ், தங்கும் விடுதி நடத்துனர்களுக்கு பிச்சைக்காரர்களை தங்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்தூர் மற்றும் நாட்டின் மற்ற ஒன்பது நகரங்களை பிச்சை எடுப்பதில் இருந்து விடுவிக்கும் நோக்கில் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தூர் நிர்வாகம் பிச்சை எடுப்பதற்கும் தடை விதித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தூரில் பிச்சைக்காரர்களை அகற்றும் முயற்சியின் போது, ​​தனது இரண்டு குழந்தைகளுடன் பிச்சை எடுப்பதாகக் கூறிய பெண் ஒருவர் பிடிபட்டார்.

உஜ்ஜைன் சாலையில் லவ்குஷ் சந்திப்பில் அந்தப் பெண் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். பிச்சை எடுத்து ஒரு மாதத்தில் ரூ.2.5 லட்சம் சம்பாதித்ததாகவும், தனது மாமியார்களுக்கு ரூ.1 லட்சத்தை அனுப்பியதாகவும் கூறினார். விசாரணையில் அந்த பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் உள்பட நிலம், இரண்டு மாடி வீடு, பைக், ஏராளமான சொத்துகள் இருப்பது தெரியவந்தது. தனது வீடு ராஜஸ்தானில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!