நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

 
நவராத்திரி
நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. தீபாவளி, தசரா விழா, நவராத்திரி விழா, கொலு பொம்மைகள் என்று திரும்பும் இடமெல்லாம் நமது பாரம்பரியத்தோடு திருவிழாக்களும், கொண்டாட்டங்களுமாக உற்சாகம் பிறக்க துவங்கி விட்டது.

இந்த தருணத்தில், நம் குழந்தைகளுக்கும் பாரம்பரிய பண்டிகைகளையும், வழிபடும் முறைகளையும் சொல்லித் தாருங்கள். அசுரனை வென்ற அன்னை மகிஷாசுர மர்த்தினிக்கு ஒன்பது நாட்களிலும் தினம் தினம் சிறப்பு பூஜைகள் செய்ய தயாராகி வருகிறோம். அன்னைக்கு பிடித்த ஒவ்வொன்றும் மிக முக்கியமானதல்லவா.

செல்வம் கொழிக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு!

அம்பிகைக்கு உகந்த வாசனை பொருட்களில் மருதாணி முக்கியமான ஒன்றாகும். லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் மருதாணியும் ஒன்று என்பது தெரிந்திருக்கும் தானே? அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மருதாணியை மிஸ் பண்ணலாமா? நவராத்திரி பூஜைகள் செய்யும் போது அன்னைக்கு , நல்ல வாசனையோடு மருதாணி வைத்த கைகளில் தூப, தீப, ஆராதனைகள் செய்யும் போது அம்பிகை மனம் குளிர்கிறது.

சிரம காலங்களில் சிக்கித் தவிக்கும் பெண்கள் தொடர்ந்து 12 வாரங்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மருதாணி வைத்த கையுடன் அம்பிகைக்கு செவ்வரளி மற்றும் சிவப்பு நிற மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வர துயரங்கள் அனைத்தும் தூர விலகி விடுகிறது. மனம் நிறைந்த நம்பிக்கையை வைத்து, உடல் தூய்மையுடன் அன்னை ஆதி அபிராமியை  வேண்டிட நமது பெருங்கவலைகள் பறந்தோடி விடும்.

வசந்த நவராத்திரி

பொதுவாக  அம்பாளை பூஜிக்கும் காலங்களில் மருதாணி வைத்துக் கொள்ளலாம், நவராத்திரி காலங்களில் நமது வீட்டிற்கு  வரும் பெண்களுக்கும் மருத்துவ குணம் நிறைந்த மருதாணி வைத்து விடலாம். அம்பிகைக்கு பிடித்த பொருளைத் தருவதால் அன்னையின் அருள் நிறைய பெறலாம்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web