கொடூரம்... இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்... சொந்த அக்கா கணவன் வெறிச்செயல்!
இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு? அதுவும் கூடப் பிறந்த அக்காகாரியே இப்படியெல்லாம் செய்வாளா? என்று கேட்க தோன்றுகிறது. ஆனால்... நிஜம்... கூடப் பிறந்த சொந்த அக்காவும், அக்கா கணவரும் சேர்ந்து தான் 11 நாட்கள் இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்ப்பொடியைத் தூவி கொடுமைப்படுத்தியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருபவர் 27 வயதுடைய இளம்பெண் ஒருவர். அவருக்கும் அவருடைய சகோதரி குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது .இதனால் இளம்பெண் அந்த இடத்தின் உரிமையாளர் பாண்டி வெங்கடேசனிடம் கடன் வாங்கயுள்ளார். அந்த கடனை அடைப்பதற்காக அந்தப் பண்ணையில் இளம்பெண் வேலை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தமும் போடப்பட்டது. அக்கா மீது உள்ள கோபத்தால் அந்த பெண் வேலைக்கு செல்லவில்லை எனத் தெரிகிறது.
அந்த பெண்ணின் சகோதரி மற்றும் அவருடைய கணவரும், இடத்தின் உரிமையாளருமான பாண்டி வெங்கடேசன் என இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கடுமையாக தாக்கி உள்ளனர். அத்துடன் அவருடைய கண்கள், முகம் மற்றும் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி சித்திரவதை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இளம்பெண் மீது டீசலை ஊற்றி தீ வைத்து சுமார் 11 நாட்கள் இப்படி அந்த பெண்ணைத் தொடர்ந்து சித்திரவதை செய்து ரசித்துள்ளனர்.
இந்த விஷயம் குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல்துறையினர் அதிரடியாக சென்று அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!