பதற செய்யும் வீடியோ... மகளை தலைகீழாக கட்டி வைத்து தந்தை செய்த கொடூரம்!
“அப்பா... தயவு செய்து என்னை விட்டுடுங்க...” என்று சைகையில் கதறுகிறாள் 10 வயதேயான அந்த மகள். பெற்ற மகளை தலைகீழாக தொங்கவிட்டு தண்டித்து கொடூரமாக அடிக்கிறார் தந்தை. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. கோவிந்த் தாஸ் ராய்க்வார் தாம்னாவில் வசிக்கிறார். அவருக்கு 45 வயது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இந்த மகளுக்கு 10 வயது. பேச முடியாது: 10 வயது குழந்தை என்பதால், விளையாட்டுத்தனமாக இருந்துள்ளார்.. இதனால், மிகவும் பேச முடியாத மகளை, கோவிந்த் தாஸ் கொடூரமாக அடித்துள்ளார். இதற்காக தனது 10 வயது மகளின் கால்களில் கயிற்றை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு அடித்துள்ளார்.
அப்போது மகள் வலி தாங்க முடியாமல் "அப்பா, தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்" என்று சைகையில் கெஞ்சுகிறாள். இருப்பினும் கொடூரமான தந்தை தன் மகளை தொடர்ந்து அடிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இச்சம்பவத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் அப்பகுதி மக்கள் போலீசில் புகார் செய்தனர். உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
போலீஸ் அதிகாரி ராஜா தினேஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோவிந்த் ராய்க்வார் தனது மகளை 10 வயது சிறுமி கூறியதை ஏற்காததால் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள ஒருவர் வீடியோ எடுத்து வைரலாக்கினார். தற்போது, கோவிந்த் தாஸை கைது செய்துள்ளோம், மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்றார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!