தாவூத் இப்ராஹிம் கூட்டாளி ஆரிப் ஷேக் சிறைச்சாலையில் திடீர் மரணம்!

 
இந்தியாவையே அலற செய்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி ஆரிப் ஷேக் சிறையில் திடீர் மரணமடைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசித்து வருகிறார். தாவூத் இப்ராகிம், அவரது நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகில் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சர்வதேச பயங்கரவாத வலையமைப்பை நடத்தி வருகின்றனர்.

இந்நிறுவனம் டி-கம்பெனி என்ற பெயரில் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு தாவூத் இப்ராகிம், அவரது கூட்டாளி சோட்டா ஷைல் மற்றும் கைது செய்யப்பட்ட 3 கூட்டாளிகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐ-6ஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.அந்த 3 கூட்டாளிகள் ஆரிப் அபுபக்கர் ஷேக், ஷபீர் அபுபக்கர் ஷேக் மற்றும் முகமது சலீம் குரேஷி. இவர்கள் அனைவரும் பல்வேறு வகையான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என என்ஐஏ விசாரணையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் ஆரிப் ஷேக் என்கிற ஆரிப் பைஜான் கைது செய்யப்பட்டு ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டான். சோட்டா ஷகிலின் உறவினரான ஆரிப் ஷேக், சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆரிப் ஷேக், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!