அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து... 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிர மாநிலம், மும்பை செம்பூர் பகுதியில் உள்ள சித்தார்த் காலனியில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் இரண்டு மாடிகளைக் கொண்ட கடை மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக நிகழ்விடத்துக்கு வந்து சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் டேங்கர்கள் மற்றும் காவல்துறையினர் போராடி தீயை சுமார் 4 மணி நேரம் போராடி 9.15 மணியளவில் முழுமையாக அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், என்ன காரணம் என்று இது வரை தெரியவில்லை. இது குறித்து தீயணைப்பு அதிகாரி கூறுகையில், “கட்டிடத்தின் தரை தளம் கடையாகவும், மேல் தளம் வசிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 7 பேர் தீயில் சிக்கி படுகாயமடைந்திருந்தனர்.
அவர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்டு ராஜாவாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக அறிவித்தனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் பாரிஸ் குப்தா (7), மஞ்சு பிரேம் குப்தா (30), அனிதா குப்தா (39), பிரேம் குப்தா (30), நரேந்திர குப்தா (10), விதி சேதிராம் குப்தா (15) மற்றும் கீதாதேவி தரம்தேவ் குப்தா (60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தரைத்தளத்தில் தீ மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மேல் தளத்திற்கும் தீ மளமளவென பரவியது” என்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!