உத்தரகாண்ட்டில் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ.. நூற்றுக்கணக்கில் ஹெக்டேர் நாசம்... களமிறங்கியது இந்திய ராணுவம்!

 

கோடை காலத்தில் காட்டுத் தீ அதிகமாக இருக்கும். எனவே அதை மனதில் வைத்து வனப்பகுதியில் எரியக்கூடிய பொருட்கள், அல்லது சிறிய தீவிபத்துகள் கூட பெரிய அளவிலான காட்டுத்தீக்கு வழிவகுக்கும். அந்த வகையில்,  உத்தரகாண்ட் மாநிலத்தில், நைனிடா பகுதியில் காட்டுத் தீ பரவி வருவதால், தற்போது அதை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது தீயை அணைக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஐஏஎஃப் எம்ஐ-17 ராணுவ ஹெலிகாப்டர் நைனிடா பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் குமாவோனில் இதுவரை 26 தீ விபத்துகளும், கர்வாலில் 5 தீ விபத்துகளும் பதிவாகியுள்ளன. இதுவரை மொத்தம் 33.34 ஹெக்டேர் வனப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. ஜகோலி மற்றும் ருத்ரபிரயாக் பகுதிகளில் காட்டுத் தீயை ஏற்படுத்தியதாகக் கூறி வனத் துறையினர் வனத் தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 3 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நரேஷ் பட் என்பவர் மட்டுமே  ஆடு மேய்ச்சலுக்கு புல் வளர்ப்பதற்காக பழைய புல் பயிர்களுக்கு தீ வைத்ததாக ஒப்புக்கொண்டார். மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காட்டுத் தீ பரவி வருவதால் நைனிடா ஆற்றங்கரையில் படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் 575 காட்டுத் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காட்டுத் தீ காரணமாக இதுவரை 689.89 ஹெக்டேர் வனப் பகுதி சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!