அடக்கொடுமையே... 6 வயசு சிறுமிகள்... ஸ்கூல் பஸ்ஸில் பலாத்காரம் செய்த ஓட்டுநர்!

 

பெற்றோர்களே... கூடுமானவரை உங்கள் குழந்தைகளை நீங்களே பள்ளியில் விட்டு விட்டு, பின் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து செல்லுங்க. ஸ்கூல் பேருந்து, வேன் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பியும் அனுப்பி வைக்க முடியவில்லை. புனேவில் சிறுமிகள் பள்ளி ஊழியராலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த அதிர்ச்சியாக 6 வயசு சிறுமிகள் பள்ளியின் பேருந்து ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது பதைபதைக்க செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் வானெவாரியே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்துவிட்டு வீடு திரும்ப பள்ளி நிர்வாகத்தால் பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த பள்ளியில் பயிலும் 6 வயது சிறுமிகள் இருவரை அப்பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரியும் 45 வயது நபர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமிகள் இருவரும் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்த கொடுமையை கூறி, தங்களின் பிறப்புறுப்பில் வலி இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பத்லாபூர் பகுதியில் பள்ளி துப்புரவு பணியாளரால் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் பெரும் போராட்டம் வெடித்து சமீபத்தில் குற்றவாளி என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!