வாழ்க்கையே போச்சு... திருமணமாகி 7 நாட்களில் தனது குடும்பத்தினர் 8 பேர் வெட்டிக் கொலை... மாப்பிள்ளையும் தற்கொலை!
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டம், போடல் கச்சார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கு கடந்த 21ம் தேதி திருமணம் நடந்தது. அப்போது முதல் இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அனைவரும் உறங்கச் சென்ற பின் குறித்த வாலிபர் முதலில் தனது மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்றுள்ளார். அதன் பிறகு தனது தாய், சகோதரி, சோகதரர், மைத்துனர் மற்றும் 3 குழந்தைகளை ஒருவர் பின் ஒருவராக கொடூரமாக கொன்றார்.
இவரால் தாக்கப்பட்ட மற்றொரு 10 வயது சிறுவன் சிறு காயங்களுடன் தப்பித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து மஹூல்ஜிரி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணீஷ் காத்ரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பேர் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களை வெட்டிக் கொன்ற இளைஞரை தேடினர். அப்போது அவர் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து, கொலை செய்யப்பட்ட 8 பேரின் உடல்களையும், தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு பயன்படுத்திய கோடரியையும் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் குறித்து மணீஷ் காத்ரி கூறுகையில், "கொலைக்குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடந்த 21ம் தேதி திருமணம் நடந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. போதைக்கு அடிமையானவரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். தாக்குதலில் உயிர் தப்பிய குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை வாலிபர் கொன்ற சம்பவம் சிந்த்வாரா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!