ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவன்.. விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு.. பகீர் பின்னணி!
ஆன்லைன் கேம்களுக்கு அடிமையான கணவர், சூதாட்டத்தில் குடும்பச் சேமிப்பை இழந்ததால், ஆத்திரமடைந்த மனைவி கணவரை கழுத்தை நெரித்து கொன்றார். சந்தோஷ் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் அமித் என்ற மகன் உள்ளனர். 21 வயதான அமித் 20 வயதான ஜோதியை மணந்தார், இருவரும் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சித்தார்த் நகரில் ஒரு வீட்டில் வசிக்கின்றனர். அமித்துக்கு வேலை இருப்பதாக நம்பிய ஜோதி, திருமணத்துக்குப் பிறகு அவருக்கு வேலை இல்லை என்பதை கண்டுபிடித்தார்.
மேலும், அமித்தின் குடும்பத்திற்கு தேவையான நிதியுதவியை அமித்தின் தந்தை சந்தோஷ் தான் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு அமித், ஜோதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று இரவு ஜோதி தூங்கிக் கொண்டிருந்த மாமனார் சந்தோஷை அழைத்து அமித்தை யாரோ கொன்று விட்டதாக கூறினார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அமித்தின் உடலை சோதனை செய்தனர். அப்போது, அமித்தின் கழுத்தில் அடையாளம் உள்ளது.
வீட்டுக்குள் வெளியாட்கள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்த போலீசார் அமித்தின் மனைவி ஜோதி மீது சந்தேகம் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஜோதி அமித்தை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ஆறு மாதங்களுக்கு முன் இருவரும் கோர்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.. முதலில் அமீது தனக்கு வேலை இருப்பதாக கூறினார். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் அமித்துக்கு வேலை இல்லை என்பது ஜோதிக்கு தெரிய வருகிறது.. அதோடு அமித் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி இருப்பதும் தெரிய வருகிறது.
பின்னர், தனது குடும்பத்தின் சேமிப்பு, ஜோதியின் நகைகள் அனைத்தையும் ஆன்லைன் கேமிங்கிற்கு விற்றுள்ளார்.. விளையாட்டில் ஏமாற்றமும் நஷ்டமும்தான் மிச்சம்.. கடைசியில் ஜோதியிடம் விளையாட பணம் கேட்டு சண்டை போட்டான் அமித். இதனால், அன்றாடம் வாக்குவாதங்கள் ஏற்பட ஆரம்பித்தன.. இறுதியில் இது மரணத்திற்கு வழிவகுத்தது. ஜோதியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மரணத்திற்கான காரணத்தை விளக்கியுள்ளனர்.
இதையடுத்து அமித்தின் தந்தை சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் அமித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ஜோதியை கைது செய்தனர். பொலிஸாரின் கூற்றுப்படி, ஜோதி கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!