“நான் புத்தரின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன்...” ஆசிய உச்சி மாநாட்டில் அதிர வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

 

உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்க துவங்கியுள்ளன. இஸ்ரேல் போர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா முன்வர வேண்டும் என்று ஒவ்வொரு நாடுகள் உச்சரிக்க துவங்கி இருக்கிறது. நூற்றுக்கணக்கில் குண்டு மழை பொழிந்துக் கொண்டிருந்த போது, ரயில் பயணமாக செல்கிறார் மோடி. இந்திய பிரதமர் ரயிலில் சென்று கொண்டிருந்ததால் உடனடியாக குண்டுவீச்சு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ‘நான் புத்தரின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன்” என்று உலக நாடுகளுக்கு செய்தி சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது இந்திய பிரதமரின் ஆசிய உச்சி மாநாட்டு பேச்சு. 19வது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.மேலும் பேசிய அவர், "தென் சீனக் கடலில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை முழு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நலனுக்காக உள்ளது. கடல்சார் நடவடிக்கைகள் கடல் சட்டத்தின் ஐ.நா விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."

கடல் வணிகம் மற்றும் வான்வெளி வணிகம் உறுதி செய்வது அவசியம். இதற்கு வலுவான, பயனுள்ள நடத்தை நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். மேலும், பிராந்திய நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் மோதல்களால் மிகவும் எதிர்மறையாக பாதிக்கப்பட்ட நாடுகள்  உலகளாவிய தெற்கைச் சேர்ந்தவை. யூரேசியா மற்றும் மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் கூடிய விரைவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க அனைவருக்கும் விருப்பம் உள்ளது.

நான் புத்தரின் தேசத்திலிருந்து வந்தவன். இது போருக்கான நூற்றாண்டு அல்ல என்று நான் பலமுறை கூறியுள்ளேன். போர்க்களத்தில் பிரச்சனைகளை தீர்க்க முடியாது. இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிப்பது அவசியம். மனிதாபிமான கண்ணோட்டத்துடன், பேச்சுவார்த்தை மற்றும் ராஜ தந்திர பயிற்சிக்கு நாம் வலுவான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

விஸ்வபந்து என்ற தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில், இந்தியா இந்த திசையில் பங்களிக்க எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து செய்யும். உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது. அதை எதிர்த்துப் போராட, மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இணையம், கடல்சார் மற்றும் விண்வெளித் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் முக்கிய தூண். இன்றைய உச்சி மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் சோனெக்ஸ் சிபாண்டனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.தலைமைப் பொறுப்பை ஏற்கும் மலேசியாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் வெற்றிகரமான தலைமைக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் தருவதாக உறுதியளிக்கிறேன்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!