கொல்கத்தா டாக்டர் படுகொலை... கூட்டுபலாத்காரம் கிடையாது... குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ தகவல்!
நேற்று கொல்கத்தா மாணவியின் படுகொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. மருத்துவ மாணவி கூட்டுப் பலாத்காரம் செய்து கொலைச் செய்யப்படவில்லை என்று குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.
முன்னதாக, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்த மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், மத்திய புலனாய்வுப் பணியகம் (சிபிஐ) உள்ளூர் காவல்துறையில் குடிமைத் தன்னார்வத் தொண்டராகப் பணிபுரிந்தவர் ராய். இவர் ஆகஸ்ட் 9ம் தேதி பயிற்சி மருத்துவர் தூங்கச் சென்ற போது இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஓய்வு நேரத்தில் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் அவர் தூங்குவதற்காக சென்றிருந்தார். இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கையில், மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும், இந்த குற்றத்தை செய்தவர் ராய் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளனர். சிபிஐ விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!