முக்கோண காதல்... நடுரோட்டில் அடித்துக் கொண்ட மாணவிகள்.. அதிர்ச்சி வீடியோ!
ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர், அதே பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவனைக் காதலித்து வந்த நிலையில், யார் அந்த மாணவனைக் காதலிப்பது என்கிற வாக்குவாதத்தில் நடுரோட்டில் தலைமுடியைப் பிடித்திழுத்து, அடித்து உதைத்து சண்டையிட்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பெரும் பேசுபொருளாகி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் நடுரோட்டில் 2 மாணவிகள், தங்கள் பள்ளியைச் சேர்ந்த ஒரே மாணவனை விரும்பி வந்துள்ளனர். இது குறித்த வாக்குவாதத்தில் இரண்டு மாணவிகளும் ஈடுபட்ட நிலையில், இருவருக்கும் இடையே வன்முறை நிகழ்ந்தது. இருவருமே ஒருவரையொருவர் சரமாரியாக நடுரோட்டிலேயே அடித்துக் கொண்டனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்த வீடியோக்களில், பள்ளி சீருடை அணிந்த பதின் வயதுடைய மாணவிகள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதும், உதைப்பதும், தலைமுடியால் இழுப்பதுமாக பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் சுற்றி நிற்கும் மற்ற மாணவிகளும், அந்த பகுதியைக் கடந்து செல்லும் வழிப்போக்கர்களும் சண்டையைத் தீர்க்க மாணவிகளைப் பிரித்து விட முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதையும் மீறி 2 மாணவிகளும் கட்டுக்கடங்காமல் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
அப்பகுதியில் உள்ள உள்ளூர் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்த இந்த இரண்டு மாணவிகளும், அதே பள்ளியில் படித்த ஒரு மாணவனை விரும்பியுள்ளனர். இரண்டு மாணவிகளுமே அந்த மாணவனிடம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இருவரும் தனித்தனியே அந்த மாணவனுடன் வெளியில் சென்று ஊர் சுற்றி வந்த நிலையில், இது குறித்து பிற மாணவிகளுக்கு தெரிய வந்த நிலையில், இன்னொரு மாணவி மாணவனுடன் பேசக் கூடாது என்கிற வாக்குவாதம் மாணவிகளுக்கு இடையே சண்டையில் முடிந்தது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!