கதறியழுத எம்.எல்.ஏ., பிறந்தநாளில் சடலமாக திரும்பிய மகன்... சாலை விபத்தில் பலியான சோகம்!
பிறந்தநாளில், வீட்டிற்கு சடலமாக திரும்பிய மகனின் உடலைப் பார்த்து எம்.எல்.ஏ., கதறியழுத்தது கூடியிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் எம்.எல்.ஏ., அம்பிகா அட்டிங்கல் மகன் வினீத் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று அவரது பிறந்தநாள் என்பதால், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தனது நண்பர்களுடன் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து விருந்துக்கு கிளம்பிச் சென்றவர் அதன் பின்னர் பிறந்தநாளான நேற்று உயிரற்ற நிலையில் வீடு திரும்பினார். பிறந்தநாளான நேற்று அவரது உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது உறவினர்களையும், நண்பர்களையும் கதறியழ செய்தது.
வினீத்தின் இரண்டு வயது மகள் அலைடாவை இறுதி அஞ்சலி செலுத்த அழைத்து வந்தபோது, திரண்டிருந்த நண்பர்களும், உறவினர்களும் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறியழுதனர். இறுதிச் சடங்கிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது, கட்சி உறுப்பினர்கள் தங்கள் அன்பான தோழரைப் புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர், அது வீடு முழுவதும் எதிரொலித்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வினீத்தின் 34வது பிறந்தநாள். விபத்து மற்றும் வினீத்தின் மரணம் குறித்த தகவல்கள் எதுவும் தெரியாமல் வினீத்தின் முகநூல் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன. வினீத் சங்குமுகத்தில் உள்ள தனது உணவகத்தை மூடிவிட்டு தனது நண்பர்களுடன் ஸ்கூட்டரில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
பள்ளிபுரத்தில் இருந்து விமான நிலையம் நோக்கிச் வந்துக் கொண்டிருந்த கார் ஒன்று எதிர்புறம் வினீத் வந்துக் கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது பயங்கர வேகத்தில் மோதியது. காரை ஓட்டி வந்த வர்க்கலாவைச் சேர்ந்த சூரஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வினீத்திற்கு திருமணமாகி ப்ரியா என்கிற மனைவியும், இரண்டு வயதில் அலய்டா என்ற மகனும் உள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!