அட கடவுளே... தலை வார சீப்பை எடுத்த இளம்பெண் அலறியடித்து உயிரிழந்த சோகம்!
இப்படியெல்லாம் கூடவே மரணம் ஒருத்தரைத் தேடி வரும் என்று இன்னமும் அதிர்ச்சி விலகாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் மின்தா குமாரியின் உறவினர்கள். பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் சேர்ந்தவர் மின்தா குமாரி. தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த இவர், சம்பவ நாளில் பள்ளிக்கு செல்லும் தனது குழந்தைகளுக்கு தலை சீவி விடுவதற்காக தனது வீட்டின் கூரையிலிருந்து சீப்பை எடுக்க முயற்சித்தார். அப்போது சீப்பை சுற்றியிருந்த பாம்பு ஒன்று மின்தா குமாரியை கடித்து விட்டது. பாம்பு கடித்த உடனே அவரது உடல் முழுவதும் விஷம் பரவிய நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மின்தா குமாரி உயிரிழந்தார். அதனை கேட்ட அவரது கணவரும், குழந்தைகளும் கதறி அழும் நிலையில் முழு கிராமத்தையும் துக்கத்தில் ஆழ்ந்தது.
இது குறித்து கிராம தலைவர் ஷ்ரவன் குமார் “மழைக்காலத்தில் இது மாதிரியான விஷவாயு பூச்சிகள் வீட்டுக்குள் புகுந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். எனவே பழைய பொருட்கள், மரச்சீப்புகள் போன்றவற்றை வைப்பதற்காக கூரைகளை பயன்படுத்தும் போது முன் சிறப்பு கவனம் தேவை” என எச்சரிக்கை விடுத்துள்ளார். “வீட்டை சுற்றி சுண்ணாம்பு மற்றும் ஃபினாயில் தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்” என வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் ஒரு சிறிய அலட்சியம் கூட முடிவே இல்லாத பேரழிவை ஏற்படுத்தி விடும் என்பதை அனைவரும் உணர வேண்டும். மேலும் பாம்பு கடித்த மின்தா குமாரி உயிரிழந்த சம்பவம் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட துயரமாக மட்டுமல்லாமல் ஒரு சமூகத்தின் விழிப்புணர்விற்கும் காரணமாக அமைய வேண்டும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!