கல்யாணமாகி ஒரே வருஷம்... ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியை ஸ்கெட்ச் போட்டு கொலைச் செய்த கணவன்!
கல்யாணமாகி ஒரே வருஷத்துல மனைவியை ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக ஸ்கெட்ச் போட்டு, சாலை விபத்து போல ஏற்பாடு செய்து கொலைச் செய்த கணவனையும், மாமனாரையும், இந்த சதிதிட்டத்தில் ஈடுபட்ட மேலும் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் மேலும் ரூ.10 லட்சம் கடனையும், 6 வாகனங்களையும் மனைவி பெயரில் தவணை முறையில் வாங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.
லக்னோ மாநிலம், கஞ்சன்பூர் மாட்டியரியில் வசித்து வரும் அபிஷேக் சுக்லா(32) என்பவர், கடந்த ஏப்ரல் 2022ல் பூஜா யாதவ் (28) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், சுக்லாவுக்கு இது இரண்டாவது திருமணம்.
திருமணமான ஒரு வருடத்திற்குள் தனது மனைவி பூஜா பெயரில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி, நான்கு கார்கள், இரண்டு பைக்குகள் என தவணை முறையில் வாங்கியிருக்கிறார் சுக்லா. அதன் பின்னர் பூஜாவின் பெயரில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசியும் எடுத்துள்ளார். அதன்பின்னர் குடும்பமாக உட்கார்ந்து பூஜாவைக் கொலைச் செய்ய சதிதிட்டம் தீட்டியுள்ளனர்.
இதன்படி கடந்த மே 20, 2023 அன்று, பூஜாவின் மாமனார் ராம் மிலன் தனக்கு மருந்துகள் வாங்க வேண்டும் என்று கூறி பூஜாவை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது அந்த வழியே வேகமாக சென்ற கார் ஒன்று பூஜா மீது மோதியது. இதில் பூஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. விபத்து மரணம் என பதியப்பட்டதில், யாருக்கும் எந்த சந்தேகமும் வராத நிலையில், விபத்து நடந்த இடத்திலிருந்து ஓட்டுநர் தீபக் வர்மாவை போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர், சுக்லா தனது மனைவி பூஜா பெயரில் எடுத்திருந்த இன்சூரன்ஸ் பாலிசி ரூ.50 லட்சம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதே சமயம் கடனில் வாங்கியிருந்த 4 கார்கள், 2 இருசக்கர வாகனத்திற்கும் மனைவி இறந்து விட்டார் என்று கூறி வாகனகடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்திருந்தார்.
இது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்தும், வாகனக்கடன் அளித்திருந்த நிறுவனத்தில் இருந்தும் இது குறித்து தங்கள் சந்தேகத்தை போலீசாரிடம் தெரிவித்து, சுக்லா கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்திருப்பதைக் கூறிய போது, போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சுக்லா வந்தார்.
இதனையடுத்து பூஜா விபத்தில் கொல்லப்பட்ட கார் ஓட்டுநர் வர்மாவின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்ததில், பூஜாவின் கணவர் அபிஷேக், பூஜாவின் மாமனார் ராம் மிலன் ஆகியோருடன் அவர் உரையாடியதற்கான ஆதாரம் கிடைத்தது. அதன் பின்னரான கடுமையான விசாரணையில், வர்மா நடந்த உண்மையை வெளிப்படுத்தினார்
இந்த வழக்கை நேற்று விசாரித்து, குல்தீப் சிங் (27), திட்டத்திற்கு ஆலோசனை வழங்கிய வழக்கறிஞர் அலோக் நிகாம் (38) மற்றும் ஓட்டுநர் தீபக் வர்மா (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பூஜாவின் கணவர் அபிஷேக், மாமனார் ராம் மிலன் உட்பட மூன்று குற்றவாளிகள் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!