காதலுக்கு எதிர்ப்பு.. மகளின் கண் எதிரிலேயே தந்தையை கூறுபோட்ட காதலன்!
தன்னுடைய மகளை காதலித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருமணம் செய்து தர மறுத்து வந்த காதலியின் தந்தையை, காதலியின் கண் எதிரிலேயே கூறு போட்டு கொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில், பிருந்தாவன் காலனியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பவானிபுரம் செருவு மையத்தைச் சேர்ந்த ஸ்ரீராமச்சந்திர பிரசாத் (வியாபாரி) பிருந்தாவன் காலனியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தர்ஷினி இன்ஜினியரிங் மேற்படிப்பு படித்து வருகிறார். இவர் வித்யாதரபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் இன்ஸ்டாவில் நட்பாக பழகி வந்தார். தர்ஷினி மற்றும் மணிகண்டனின் நட்பு காதலாக மலர்ந்து நான்கு வருடங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து மகளின் காதல் விவகாரம் தந்தை ராமச்சந்திர பிரசாத் அறிந்ததும், மகளை நன்றாகப் படித்து வாழ்க்கையில் செட்டிலாகி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என எச்சரித்துள்ளார். அப்பாவின் வார்த்தைகளைக் கேட்ட தர்ஷினி மணிகண்டனை சில நாட்கள் ஒதுக்கி வைத்திருந்தாள்.
காதலி தர்ஷினியின் அழுகையையும், கெஞ்சலையும் காதில் வாங்காத மணிகண்டன், தந்தையை கொடூரமாக வெட்டிக் கொன்றார். அதன் பிறகு தர்ஷினியை கொலை மிரட்டல் விடுத்தார். உன்னை பற்றிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என எச்சரித்துள்ளார்.
இதையடுத்து ராமச்சந்திர பிராசாத்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிருஷ்ணாலங்கா போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, குற்றவாளி மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!