கதறும் மக்கள்... தொடரும் சோகம்... கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு!
Aug 2, 2024, 10:05 IST
கடவுளின் தேசம் இன்னும் கதறிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதுமே கேரள நிலச்சரிவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இரவு பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ஒட்டுமொத்த தேசத்தையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது கேரள நிலச்சரிவு. கேரள நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை இதுவரை 316 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளின் போது மண்ணைத் தோண்டும் இடங்களில் எல்லாம் சடலங்கள் உருக்குலைந்து மனதை உலுக்கியெடுக்கிறது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அடுத்தடுத்து வயநாட்டில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
225 பேரின் விவரம் தெரியாததால், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 400க்கும் மேற்பட்ட வீடுகளில் 40 வீடுகள் மட்டுமே மீதம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பலர் காணாமல் போனதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!