அதிர்ச்சி... சிறுமிக்கு தீ வைத்த எரித்த கொடூரம்.. 10 நாள் போராட்டத்திற்கு பின் உயிரிழந்த சோகம்!
ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் கடந்த 10ம் தேதி காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது சிறுமி தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது. இதையறிந்த அவரது தாயார், வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, 100 அடி தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் சிறுமி எரிந்து இறந்து கிடந்தார்.
இதை பார்த்த தாய் அலறி துடித்தார். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அச்சிறுமியை மீட்டு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அச்சிறுமி தனது தாயிடம் சைகை மூலம் 2 பேர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறியுள்ளார். சிறுமியின் சைகையை வாக்குமூலமாக எடுத்துக் கொண்ட போலீஸார், கடந்த மே 14-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி யார் என்று விசாரிக்கத் தொடங்கினர்.
சந்தேக நபர்களின் புகைப்படங்களை அச்சிறுமி முன்பு காட்டினார், மேலும் ஒருவரை அச்சிறுமி அடையாளம் காட்டினார். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (மே 20) சிகிச்சை பலனின்றி அச்சிறுமி உயிரிழந்தார். பத்து நாட்கள் போராடிய அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அங்குள்ளவர்கள் சில உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், இது குறித்து காவல்துறை தரப்பில் எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில், உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்க நாள் நெடுங்காலமாக உள்ளதாகவும், அவரது மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், இறந்த சிறுமிக்கு நீதி கிடைக்க நாங்களும் போராடி வருகிறோம். நியாயமான தீர்ப்பு கிடைப்பது உறுதி. சமூக ஊடகங்களில் சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
சிறுமியின் தோல் மற்றும் ஆடைகளின் மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் விரைவில் விசாரணை தொடங்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!