அதிர்ச்சி.. மகளின் பெர்சனல் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட தந்தை!

 

மனைவியின் உறவினர் ஒருவரை மகள் காதலித்து வந்தது தெரிய வந்ததால், மகளின் தனிப்பட்ட புகைப்படங்களை பெற்ற தந்தையே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தந்தையைக் கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில், தனது 18 வயது மகளின் அந்தரங்க வீடியோக்களை சமூக ஊடக தளங்களில் பரப்பியதாக தனது கணவர் மீது தாய் புகார் அளித்துள்ளதாக போலீசார்  தெரிவித்தனர். தந்தையின் செயலைத் தொடர்ந்து, மகள் நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கலைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.  இதையடுத்து அவர் உடுப்பி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள புகாரின் படி, மகள் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த தனது தாய் வீட்டைச் சேர்ந்த உறவினர் ஒருவரைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் குறித்து தெரிய வந்த நிலையில், மகளின் காதலனை வீட்டிற்கு அழைத்த தந்தை, காதலனை அடித்து, அவனது தொலைபேசியில் இருந்து அனைத்து மகளின் தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் வலுக்கட்டாயமாக பதிவிறக்கம் செய்து சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளார். 

அதன் பிறகும் ஆத்திரம் தீராமல் அவர் தனது மகளையும், மனைவியையும் அடித்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்கள் பரவிய நிலையில், அவமானத்தில் மகள் தனது வாழ்க்கையை முடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. சிறுமியின் தாய் உடுப்பியில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து கணவன் மீது புகார் அளித்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!