ஷாக்.. குடும்ப கட்டுப்பாடு செய்த பின்னும் கர்ப்பம்.. 82 பேரில் 81 பெண்கள் மீண்டும் கருத்தரிப்பு!
2021 முதல் தற்போது வரை, ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் அலிகார் மாவட்டம் உத்திர பிரதேசத்தில் முதலிடம் உள்ளது. 2021-22ல் 4,800, 2022-23ல் 5,240 மற்றும் 2023-24ல் 6,084. மறுபுறம், இந்த மாவட்டத்தில் கருத்தடை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் 99 சதவீதம் பேர் குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளனர்.
இந்தப் பிரச்னைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அலிகார் அரசு தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நீரஜ் தியாகி தலைமையில் அலிகாரில் நடைபெற்றது. 2010 மற்றும் 2023 க்கு இடையில், 82 பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையின் போது 81 பெண்கள் மீண்டும் கர்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது.
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் இது குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 81 பெண்களுக்கும் அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது.அதேபோல், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்குப் பிறகும் கருத்தரிக்கும் பெண்களுக்கு ரூ.60,000 வழங்கப்படுகிறது. இதில் ரூ.30,000 உ.பி அரசும், மீதியை மத்திய அரசின் மருத்துவ திட்டமும் வழங்குகிறது. இந்த சிகிச்சையில் பெண்கள் உயிர் பிழைத்தால், 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!