அதிர்ச்சி... அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் 7 மயில்கள் கண்டெடுப்பு!
உத்தர பிரதேச மாநிலத்தில் வயல்வெளி ஒன்றில் அடுத்தடுத்து பெண் மயில் உட்பட இறந்த நிலையில் 7 மயில்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்று மாலை 7 மயில்களின் சடலங்கள் சனிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து பெயர் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை துணை மண்டல அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மயில்கள் இறந்துள்ள நிலையில், இது குறித்து வன அதிகாரி கியான் சிங் கூறுகையில், பிக்காவாலே கிராமத்தில் உள்ள வயலில் பெண் மயில் ஒன்று உட்பட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
உடற்கூராய்வுக்காக மயில்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உடற்கூராய்வு அறிக்கை கிடைத்தவுடன் இறப்புக்கான சரியான காரணம் கண்டறியப்படும். இந்த மயில்கள் விஷம் கலந்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது” என்றார். வயல்வெளியில் மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!