அதிர்ச்சி வீடியோ... 6 வயது சிறுமியிடம் தெரு நாய்கள் நிகழ்த்தி கொடூரம்!
நாடு முழுவதும் தெருநாய்களின் தொல்லைகள் அதிகரித்து வருகின்றது. வருடத்திற்கு ஆயிரக்கணக்கானோர் தெருநாய்க்கடி காரணமாக உயிரிழந்து வரும் அவல நிலை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாஜாபூர் மாவட்டம் மஹுபுரா பகுதியில் 6 வயது சிறுமியை நோக்கி தெருநாய்கள் திடீரென பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோனு பாவ்சரின் 6 வயது மகள் பாவ்சர். இந்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது 2 தெரு நாய்கள் திடீரென சிறுமியை நோக்கி பாய்ந்தன.
இந்த பகுதியில் தொடர்ச்சியாக தெரு நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவதால், பொதுமக்கள் பெரும் கவலையில் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இதே பகுதியில் 10 வயது சிறுமியை நாய்கள் தாக்கியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
தெரு நாய்களின் அச்சுறுத்தலால் சிறுவர்கள் பாதுகாப்பாக வெளியில் விளையாட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து, ஷாஜாபூர் நகராட்சியினர், அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு தெருநாய்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!