ஐஸ்க்ரீம் டெலிவரி செய்யாத ஸ்விக்கி ஊழியர்... பெண் வாடிக்கையாளருக்கு ரூ.5,000 வழங்க நீதிமன்றம் உத்தரவு!

 

ஸ்விக்கி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் நாடு முழுவதும் பல கிளைகளுடன் செயல்படுகிறது. இந்நிலையில், பெண் ஒருவர் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமை டெலிவரி செய்யாத ஸ்விக்கி நிறுவனம் ரூ.5,000 செலுத்த வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்விக்கி செயலி மூலம் 'நட்டி டெத் பை சாக்லேட்' ஐஸ்கிரீமை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ரூ.187 செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்ற பிறகு, ஸ்விக்கி அவருக்கு ஐஸ்கிரீமை வழங்கவில்லை.

அதாவது, ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீமை வாங்கிய டெலிவரி ஏஜென்ட், பெண்ணுக்கு டெலிவரி செய்யவில்லை. ஆனால் swiggy செயலியில் டெலிவரி செய்யப்பட்டதாக நிலை வெளியிடப்பட்டது. இதுகுறித்து ஸ்விக்கியிடம் அந்த பெண் கேட்டபோது, ஐஸ்கிரீம் வாங்கிய பணத்தை அந்த பெண்ணிடம் திருப்பி தரவில்லை. இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் பெங்களூரு நகரிலுள்ள இரண்டாவது கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது, ஸ்விக்கி "இது ஒரு இடைத்தரகர் என்றும், அதன் டெலிவரி ஏஜென்ட் செய்யும் எந்த தவறுக்கும் நிறுவனம் பொறுப்பேற்காது" என்றும் கூறியது.

ஸ்விக்கியின் வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், “அவர்களின் சேவையில் குறைபாடு உள்ளது. இது ஒரு மோசமான வணிக நடைமுறை. பணத்தை அவரிடமே திருப்பித் தர வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ரூ.3,000 மற்றும் வழக்குச் செலவாக ரூ.2,000 மற்றும் மொத்தம் ரூ.5,000 ஸ்விக்கி  வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

மேலும் ஐஸ்கிரீம் வாங்குவதற்கு வாடிக்கையாளரிடம் 187 ரூபாயை திரும்ப செலுத்துமாறும் கூறியுள்ளது. வாடிக்கையாளர் இழப்பீடாக 10,000 ரூபாயும், வழக்கு செலவுக்காக 7500 ரூபாயும் கேட்டிருந்தார். ஆனால் இந்த தொகை மிக அதிகம் என நீதிமன்றம் நிராகரித்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!