தாலி மஞ்ச வாசம் போகலையே... திருமணமான 20 நாளில் புதுமணப்பெண் தற்கொலை!
தாலியின் மஞ்ச வாசம் கூட முழுசாப் போகலை. திருமணமான 20 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கர்நாடகா மாநிலம், ஆனேகல் தாலுகா சர்ஜாபூரில் உள்ள கோட் தெருவைச் சேர்ந்தவர் ஷாபாஸ்(24). இவருக்கும் ஷபானா(20) என்பவருக்கும் கடந்த இருபது நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை அவரது அறைக்கு ஷாபாஸ் சென்ற போது, ஷபானா தூக்கில் இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சர்ஜாபூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், தூக்கில் இருந்து ஷபானா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அட்டிபெலே ஒக்ஸ்போர்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன்பின் வழக்குப்பதிவு செய்து, ஷபானா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தினர். கணவர் ஷாபாஸ் தொல்லையால் தான் அவரது மனைவி ஷபானா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஷாபாஸிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான இருபது நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!