பாஜக எம்எல்ஏ காலில் விழுந்து கெஞ்சிய டெல்லி அமைச்சர்.. அதிர்ச்சி வீடியோ!

 

பாஜக எம்.எல்.ஏ. காலில் விழுந்து டெல்லி அமைச்சர் ஒருவர் கதறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. யாரும் எதிர்பாராத தருணத்தில் திடீரென டெல்லியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ. காலில் விழுகிறார். மக்களுக்காக இதைச் செய்வோம் என்று வலியுறுத்துகிறார். ஆனால், எல்லா அரசியல் தலைவர்களுமே நிஜத்தில் மக்கள் பணியில் ஈடுபடுகிறார்களா என்ன? என்று கேள்வியெழுப்பும் வகையில் இருக்கிறது தற்போதைய அரசியல் நிலவரம்.

இந்நிலையில், பாதுகாவலர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கடந்த மாதம் டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் சக்சேனாவிடம் நேரில் முறையிட டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தலைமையிலான குழு ஒன்று கூடியது. ஆனால் அவர்கள் ஆளுநரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில், டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.க. எம்.எல்.ஏ விஜேந்தர் குப்தாவை ஆம் ஆத் கட்சியினர் சந்தித்து கவர்னரை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தனர், ஒரு கட்டத்தில் அமைச்சர் சவுரப் பரத்வாஜ், பா.ஜ.க. எம்எல்ஏவின் காலில் விழுந்து கெஞ்சினார். டெல்லி அமைச்சர், பாஜக எம்எல்ஏ காலில் விழும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!