undefined

கொடூரத்தின் உச்சம்.. கொதிக்கும் பாலை குழந்தையின் மீது ஊற்றி நேர்த்திக்கடன்!

 

இறை நம்பிக்கை அனைத்து தரப்பு மக்களிடையே இருந்தாலும், சில பகுதிகளில்  அவற்றின் பெயரில் நடத்தப்படும் மூர்க்கமான வழிபாட்டு முறைகள் அவ்வப்போது கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. அப்படித்தான் காசிதாஸ் பாபா பூஜை என்ற சடங்கு வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வீடியோவில், கொதிக்கும் பால் பானை அடுப்பில்  ஒரு பக்தர் தனது கைக்குழந்தையை எடுத்து பால் பானையில் வைக்க முயற்சிக்கிறார். குழந்தை கொதிக்கும் பாலின் கால் வைத்துஅழுகிறது.

பிறகு மீண்டும் குழந்தையைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, கொதிக்கும் பாத்திரத்தை ஒரு கையால் தூக்கி, சூடான பாலை தனக்கும் தன் குழந்தைக்கும் ஊற்றுகிறார். குழந்தை வெப்பம் தாங்க முடியாமல் அலறிக்கொண்டே இருந்தது. வடமாநிலங்களின் சில பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை எக்ஸ் தளத்தில் ஒருவர் பகிர்ந்தபோது, ​​இது என்ன மூடநம்பிக்கை பிரார்த்தனை என பலரும் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் உள்ள யாதவர்களிடையே இது ஒரு விசித்திரமான சடங்கு என்றும் இது காசிதாஸ் பாபா பூஜை என்றும் அழைக்கப்படுகிறது என்று ஒரு பயனர் கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!