அடுத்த அதிர்ச்சி... ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தன!

 

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம்  மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. இன்று  காலை 9.27 மணிக்கு  விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அந்த நேரத்தில்  கனமழை பெய்து கொண்டிருந்தது. இதனையடுத்து தரையிறங்கிய விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்று நின்றுள்ளது. உடனடியாக அவசரகால நடவடிக்கையை மேற்கொண்ட விமான நிலைய பாதுகாப்புக் குழு, விமானத்தை பத்திரமாக டாக்ஸி பகுதிக்கு கொண்டு வந்து பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினார்.  

இது குறித்து  விமான நிலையம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்  "கொச்சியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையைக் கடந்து சென்றது. இதையடுத்து விமான நிலையத்தின் அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக பயணிகளை மீட்கும் பணியைத் தொடங்கியது. அனைத்து பயணிகள், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையான 9/27 சிறிதளவு சேதமடைந்துள்ளது. உடனடியாக, 2 வது ஓடுபாதையான 14/32 செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது  விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?