பகீர் வீடியோ... 27வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை!

 

அந்த வீடியோவைக் காண்பவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். 27வது மாடியில் இருந்து 3 வயதுக் குழந்தை ஒன்று தவறி கீழே விழுவது பதைபதைக்க வைக்கிறது. உத்தரபிரதேச மாநிலம்,  நொய்டா கார் சிட்டியில் உள்ள அபார்ட்மெண்ட் குடியிருப்பு ஒன்றில் தம்பதியர் ஒருவர் தங்களது 3 வயது மகளுடன் 27வது மாடியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், குழந்தையின் தந்தை வேலைக்குச் சென்ற நிலையில், தாய் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த போது, தனியாக விளையாடி கொண்டிருந்த குழந்தை மதியம் 12.30 மணியளவில் வீட்டின் பால்கனி அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென தவறி கீழே விழுந்தது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் அலறியடித்துக் கொண்டு ஓடி செல்கிறார். அதிர்ஷ்டவசமாக குழந்தை 27வது மாடியில் இருந்து விழுந்த நிலையில், 12வது மாடியில் உள்ள பால்கனியில் தவறி விழுந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்த அதிர்ச்சியில் இருந்து குழந்தை மீளவே இல்லை. எனினும் தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து குழந்தையை கண்காணித்து வருகிறோம்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பால்கனியில் இருந்து அழும் குழந்தையை ஒருவர் தூக்கிச் செல்லும் காட்சியை இது காட்டுகிறது. இது உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குழந்தையின் தாயின் கவனக்குறைவே இந்த சம்பவத்திற்கு காரணம் என ஒரு பக்கம் குற்றம் சாட்டினர். மறுபுறம், நொய்டாவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் போதிய பாதுகாப்பு இல்லை. எனவே, அங்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குற்றம் நடந்த இடம் மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். இது உண்மையான விபத்து என்பதால் வழக்குப்பதிவு செய்யவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியில் இருந்து குழந்தை ஒன்று விழுந்தது. அப்போதும் அக்கம்பக்கத்தினர் தான் குழந்தையை மீட்டனர். எனவே பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!