சொகுசு ஹோட்டலில் 2 நாட்கள் திகட்ட திகட்ட உல்லாசம்... காதலியைக் கொன்று பார்சல் கட்டிய இளைஞன்!

 
இரண்டு நாட்கள் சொகுசு ஹோட்டலில் திகட்ட திகட்ட காதலியுடன் உல்லாசம் அனுபவித்த நிலையில், காதலியைக் கொலைச் செய்து விட்டு, அதன் பின்னர் காதலியின் சடலத்தைப் பார்சலாக பையில் திணித்து எடுத்துக் கொண்டு ஹோட்டல் அறையை காலி செய்து கிளப்பியிருக்கிறான் வினோத். ஹரியானாவை சேர்ந்த இளைஞர் வினோத். இவருக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சீத்தல் எனும் இளம்பெண்ணும் இடையே நட்பு உருவாகி, நாளடைவில் காதலர்களாக இருவரும் வலம் வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மே 13ம் தேதி மணாலியில் உள்ள கோம்பா சாலையில் உள்ள சொகுசு ஓட்டலுக்கு இருவரும் சென்றனர். காதல் ஜோடிகள் இரண்டு நாட்களுக்கு அந்த ஹோட்டலில் அறையை பதிவு செய்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, வினோத் மட்டும் அறையை காலி செய்துவிட்டு பேருந்து நிலையம் செல்ல டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார். இதில் ஏதோ மர்மம் இருப்பதை யூகித்த ஓட்டல் ஊழியர்கள், போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்தனர். இதையறிந்த வினோத் தனது பையை டாக்ஸியில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

போலீசார் வந்து பையை திறந்து பார்த்தபோது, உள்ளே சீதலின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்த அறையை பதிவு செய்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், சீதலின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததால், குற்றவாளியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அன்றிரவே வினோத்தை கைது செய்தனர். தற்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீத்தலை ஏன் கொன்றார், இருவருக்கும் என்ன தொடர்பு, அவர்களுக்குள் என்ன தகராறு என வினோத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!