அதிர்ச்சி... சிறுமியை கற்பழித்து விட்டு ரூ.100 கொடுத்து ஈடு கட்டிய கொடூரம்!

 

சிறுமியைக் கற்பழித்து விட்டு, ரூ.100 கொடுத்து ஈடுகட்டிய கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தன்னை உயர்வகுப்பு என்று சொல்லிக் கொள்ளும் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு நரேஷ் சிங் மற்றும் ஹர்விந்திர குமார் ஆகிய இரண்டு உயர்சாதி ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறினார்.

அதன் பின்னர் தன்னை அச்சுறுத்தியதாகவும், சம்பவத்தை வெளியில் கூறாமல் இருக்க 100 ரூபாய் கொடுத்து நடந்த விஷயத்தை வெளியே சொல்லாமல்  இருக்குமாறு வற்புறுத்தியதாகவும் சிறுமி கூறினார். பணத்தை கொடுத்த பிறகு தொடர்ந்து பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார். சிறுமியின் புத்தகப் பையில் பணம் இருப்பதைக் கண்டு தாய் விசாரித்தபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த கொடூரமான சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், அக்டோபர் 8-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளான நரேஷ் சிங் மற்றும் ஹர்விந்திர குமார் ஆகியோரை கைது செய்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!