10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!! மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதம்!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 6 – 20 வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
அத்துடன் மாணவர்களின் கைபேசி எண்களுக்கு குறுந்செய்திகள் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.66% தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை மே 19ம் தேதி வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். தவிர, பள்ளிகளில் மாணவர்கள் கொடுத்திருக்கும் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!