குலதெய்வ வழிபாடு... 100 கீ.மீ. மாட்டு வண்டியில் பயணம்.. ஒன்று திரண்ட 56 கிராம மக்கள்!

 

தமிழகம் பல்வேறு கலாச்சாரம், பண்பாடுகளை கொண்டது. இதற்கு மக்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களே சாட்சியாக அமைகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பு கிராமத்தை தலைமையாகக் கொண்ட 56 கிராமங்களைச் சேர்ந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள குலதெய்வங்களை தொன்று தொட்டு மாட்டு வண்டிகளில் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். 

அதன்படி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு குலதெய்வங்களை வழிபாடு செய்ய முடிவு செய்தனர். இதற்காக 16ம் தேதி நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள், மினி வேன்கள் மற்றும் டிராக்டர்கள் என 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் 56 கிராம மக்களும்  புறப்பட்டனர். இவர்கள் வழியில் ஆங்காங்கே தங்கி சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்தவாறு 20ம் தேதி சிவகாசியை சென்றடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிவகாசி அருகேயுள்ள சோரம்பட்டி அர்ஜூனா ஆற்றுப் பாலத்தில் பூஜைகள் நடத்தினர். பின்னர் மூன்று குழுக்களாகப் பிரிந்து எம். புதுப்பட்டி, மல்லி மற்றும் கீழராஜகுலராமன் கிராமங்களில் உள்ள தங்களது குலதெய்வ கோவில்களுக்கு சென்று குல தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். 

தொடர்ந்து, பிரிந்து சென்ற அனைவரும் வரும் 27ம் தேதி எம். புதுப்பட்டி கூடமுடையார் அய்யனார் கோவிலில் ஒன்று கூடி கிடா வெட்டி அசைவ உணவை படையலிட்டு, குல தெய்வ வழிபாட்டை முடிக்கவுள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!