undefined

அஞ்சலகம் மூலம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000/-?!

 

தமிழகத்தில்  தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அன்று, இன்று என 2 வருடங்கள் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் அமைச்சர், முதல்வரைக் கேட்கத் தொடங்கியுள்ளனர். நாளுக்கு நாள் இல்லத்தரசிகளின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.  குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தான். இத்திட்டம்  அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான  செப்டம்பர் 15ல் தொடங்க இருப்பதாக  முதல்வர் அறிவித்துள்ளார்.

அதனால் அனைவரும் இந்த திட்டத்திற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். அதே நேரத்தில் இத்திட்டம் குறித்து வதந்திகளுக்கு பஞ்சமில்லை.  ரேஷன் கடைகளில் குடும்பத் தலைவி இருக்கும் கார்டுகள் மூலமாக இந்த உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனால் பலர் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவர்களின் பெயரை மாற்றி குடும்பத் தலைவி பெயர்களை சேர்க்க விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அரசு அப்படி எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது தபால் அலுவலகம் மூலமாக இந்த உதவித்தொகை வழங்கப்படும்  என தகவல்கள் வெளியாகியுள்ளன.   மேலும் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய கணக்கு தொடங்க வந்திருந்தனர்.  

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் இந்த தகவல் வெளியானது. ஒரு நாளில் 100 பேருக்கு மட்டுமே புதிய கணக்கு துவங்கப்படும் என்பதால், மற்றவர்களின் ஆதார் அட்டை மட்டுமே வாங்கி கொண்டு அடுத்த நாள் வரும்படி  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதே போல்  தினமும் 300க்கு அதிகமானோர் தபால் நிலையத்திற்கு வந்து செல்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விடுத்த செய்திக்குறிப்பில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரு1000 வழங்கும் திட்டத்திற்கான   வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும்  வெளியிடப்படவில்லை.   மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே தபால் நிலையங்களில் பெண்கள் கூடுவது கட்டுப்படுத்த முடியும் இதனால் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!