undefined

1180 சிறப்பு பேருந்துகள்... தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு !  

 
  

தமிழகம் முழுவதும் இன்று  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வார இறுதி  மற்றும்  பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஜூன் 23ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து இன்று திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை, தூத்துக்குடி, குமரி, நாகர்கோவில், நெல்லை, மதுரை, கும்பகோணம், திருச்சி மற்றும் திருவண்ணாமலை  மாவட்டங்களுக்கு 600 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோன்று நாளை  ஜூன் 22ம் தேதி 410 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  


இதேபோன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு, வேளாங்கண்ணி, ஓசூர், நாகை மற்றும் திருவண்ணாமலை  பகுதிகளுக்கு  55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதே போல் நாளையும் இந்த இடங்களில் இருந்து மறுமார்க்கமாக  55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு திருவண்ணாமலைக்கு மட்டும் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 30 பேருந்துகள் இயக்கப்படும்.

இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 15 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 15 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!