பரபரப்பு... இந்தியா பாகிஸ்தான் எல்லையில்  15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது! 

 


 
குஜராத் கடற்பகுதியில் இந்தியா பாகிஸ்தான்  எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  இது குறித்து வெளியான உளவுத்துறை தகவலின்படி  68வது பட்டாலியனின் எல்லை புறக்காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள கோரி க்ரீக் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


அப்போது இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பாகிஸ்தான் மீனவர்கள் இருப்பதை  கண்டறிந்தனர். இதையடுத்து படகுடன் 15 மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்கள் ​​பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுஜாவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 


மேலும் படகில் சுமார் 60 கிலோ மீன்கள், 9 மீன்பிடி வலைகள், டீசல், உணவுப் பொருட்கள், ஐஸ், மரக் குச்சிகள், ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த மீனவர்களிடம் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?