undefined

 லாரி மீது ஜீப் மோதி உளவுத்துறை டிஎஸ்பிக்கள் 2 பேர் பலி! 

 
 

தெலங்கானா மாநிலம், யாதாத்ரி மாவட்டம், சவுட்டுப்பல் மண்டலத்தில் உள்ள கைதபுரம்  தேசிய நெடுஞ்சாலையில்  ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை இந்த ஜீப் 4.30 மணிக்கு  விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது  சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் எதிர்திசையில் சென்று, விஜயவாடா நோக்கி சென்ற லாரி மீது மோதியது.  

இதில் ஜீப்பின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் ஜீப்பில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சவுட்டுப்பல் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரில் சிக்கியிருந்த 2 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விபத்தில் சிக்கி பலியானது ஆந்திர மாநில உளவுத்துறையில் பணி புரிந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.  பணி நிமித்தம் காரணமாக சென்றபோது போலீசாரின் கார், முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது தடுப்புச்சுவரில் மோதி பின்னர் எதிர்திசையில் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?