2 ரூபாய் மருத்துவர் காலமானார்.... முதல்வர் இரங்கல்.!
கேரளா கண்ணூர் பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் ரைரு கோபால். இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.2க்கு மருத்துவம் பார்த்து வந்தார். மற்ற மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனை வழங்க ரூ.100க்கும் அதிகமாக கட்டணம் வசூலித்து வரும் இன்றைய காலகட்டத்தில் கூட இவரது சேவை ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நோயாளி ஒருவரின் வீட்டுக்குச் சென்று சிகிச்சை அளித்த போது, அங்கு காணப்பட்ட கொடுமையான நிலைமையை கண்டு, இந்த மருத்துவ சேவைப் பயணத்தை தொடங்கியதாக கூறினார். கூலி தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் மாணவர்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார்.
தினமும் அதிகாலை 2.15 மணிக்கு தூங்கி எழுந்து பசு மாடுகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தார். பால் கறந்து, அதனை விநியோகித்த பிறகு, காலை 6.30 மணி முதல் தனது கிளினிக்கில் மருத்துவ சேவையை தொடர்வார். தேவைப்பட்டால், அதிகாலை 3 மணி முதலே மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். தினமும் குறைந்தது 300 பேருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி வந்தார்.
இவரிடம் மருத்துவ சிகிச்சை பெற தினமும் 100 பேர் வரிசையில் நிற்பார்கள். இவரது மனைவி சகுந்தலா இவருக்கு துணையாக . கூட்டத்தை கவனித்தல், மருந்துகளை வழங்குதல் போன்ற உதவிகளை செய்து வந்தார். தனது உடல்நிலை மோசமடைந்த போதும், மருத்துவ சேவை வழங்குவதை ஒருபோதும் அவர் நிறுத்தவில்லை.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மக்கள் மருத்துவர் என்று போற்றப்பட்ட ரைரு கோபால் இன்று காலமானார். அவருக்கு வயது 81. டாக்டர் ரைரு கோபாலின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பினராயி விஜயன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்; அனைவருக்கும் மருத்துவம் கிடைக்கும் வகையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளித்து வந்தார். இவ்வளவு குறைந்த கட்டணத்திற்கு அவர் வழங்கிய மருத்துவ சேவை, பல ஏழை நோயாளிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!