undefined

காரில் அழைத்து சென்று +2 மாணவிக்கு பாலியல் தொல்லை..  அதிர வைத்த ஆசிரியர்!

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் வில்லியம் பால்ராஜ் (52). இவர் அதே பள்ளியில் 16 வயதுடைய 12 வகுப்பு படித்து வந்த மாணவியை தனது காரில் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் கீரனூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லதாவிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் வில்லியம் பால்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?