ரசாயன தொழிற்சாலை விபத்தில் 2 பெண்கள் பலி... 30 லட்சம் நிவாரணத்துடன் 2 பேருக்கு வேலை வாய்ப்பு!
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கம்பளிமேடு பகுதியில் வசித்து வருபவர் அன்பு. இவரது மனைவி இளமதி. அதே பகுதியில் வசித்து வருபவர் தேவர். இவரது மனைவி இந்திரா . கட்டிட தொழிலாளர்களான இவர்கள் இருவரும், கடலூர் குடிகாட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று வேலைக்கு வந்த இருவரும் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மாலை 6 மணி அளவில் அந்த தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து இளமதி, இந்திரா ஆகியோர் மீது விழுந்தது. இவர்களது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி இளமதி, இந்திராவை மீட்டனர். அப்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த இளமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திராவை, மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கடலூர் குடிகாட்டில் சுவர் இடிந்து விழுந்ததில் இளமதி, இந்திரா ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடலூர் ரசாயன தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் 2 பேருக்கு வேலை வழங்கவும் தொழிற்சாலை நிர்வாகம் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!