வணிக வளாகத்தில் சராமாரி துப்பாக்கி சூடு... 3 பேர் பலி!
அமெரிக்காவில் ஆஸ்டின் நகரில் பிரபலமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கார் நிறுத்தம் பகுதியில் நுழைந்த மர்ம நபர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் துப்பாக்கியால் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். என்ன நடக்கிறது என்பது புரியாமல் அங்குள்ளோர் ஒருபுறம் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அதற்குள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் அங்கிருந்த 3 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்டுவிட்டு மின்னல் வேகத்தில் காரை இயக்கிய அந்நபர், சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார், துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் யார் என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.
இது குறித்து ஆஸ்டின் நகர மூத்த போலீஸ் அதிகாரி கார் நிறுத்தம் பகுதியில் நுழைந்த அடையாளம் தெரியாத ஒருவர் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். தகவல் அறிந்ததும் விரைந்து சென்று பார்த்ததில் 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய மர்ம நபரை கைது செய்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது.இதையடுத்து, நகர மேயர் கிர்க் வாட்சன் “கோழைத்தனமான துப்பாக்கிச்சூடு. மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மக்கள் பீதி அடைய வேண்டாம், நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!